17 வயதான அனிகாவா இது? நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் க்யூட் புகைப்படம்..
மலையாள குட்டி நட்சத்திரமாக கத தொடருன்னு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். ரேஸ், 5 சுந்தரிகள், நயனா உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.
குழந்தை நட்சத்திரம்
இதன்பின் நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015 வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன், தி கிரேட் பாதர் உள்ளிட்ட படங்களில் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான குயின் படத்தில் குட்டி ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

போட்டோஷூட்
சமீபத்தில் மாமனிதன் படத்தில் சிறு ரோலில் நடித்த அனிகா 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார். குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு அவரது போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வாய்ப்பிளக்க வைத்துள்ளது. தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாகவும் நடித்து நடிகை அவதாரம் எடுத்துள்ளார் அனிகா.

குட்டி நயன்தாரா
தற்போது சிறு வயதில் கர்ப்பமான சிறுமி ரோலில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டும் வந்தது. தற்போது நயன் தாராவை மிஞ்சும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

