இந்த வயசுல இப்படியொரு எக்ஸ்பிரஷன்! அஜித் ரீல் மகள் வெளியிட்ட வீடியோ..
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு பல நட்சத்திரங்கள் அறிமுகமாகி பிரபலமாகி வருவதை போன்று குட்டி நட்சத்திரங்களாக இருந்து பின் கதாநாயகிகளாக ஜொலித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் அனிகா. மலையாள குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களுக்கு அவருக்கு மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்திரன். அதன்பின் நானும் ரெளடி தான், முருதன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
விசுவாசம் கொடுத்த வரவேற்பை பயன்படுத்திய அனிகா போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வந்தார். இளம் நடிகைகளுக்கு இணையாக அவர் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலானது. அதையே தொடர்ந்து வந்த அனிகா ஒரு கட்டத்தில் 16 வயதை தாண்டியது க்ளாமருக்கு தாவினார். இதன்மூலம் குட்டி நயன் தாரா என்ற பெயரை ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
தற்போது 17 வயதை தாண்டி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களை கொடுத்து போட்டோஷூட் எடுத்து இணையத்தை கலக்கி வருகிறார். தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாகவும் அறிமுகமாகவுள்ளார் அனிகா.