16 வயது மூத்த நடிகர் தான் செலிபிரிட்டி கிரஷ்-ஆ!! 20 வயதான அனிகா சொன்ன உண்மை..
அனிகா சுரேந்திரன்
கேரளாவில் பிறந்து கதா துடருன்னு என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கிய குழந்தை தான் அனிகா சுரேந்திரன். 12 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் அனிகாவிற்கு தற்போது 20 வயதாகிறது.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன்பின் 17 வயதானபோது கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் படத்தில் நடித்து பிரபலமானார்.
சிறுவயதில் இருந்தே போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அனிகா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனுஷ் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் அனிகா, தன்னுடைய செலிபிரிட்டி கிரஷ் பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், என்னுடைய செலிபிரிட்டி கிரஷ் விஜய் தேவரகொண்டா தான் என்றும் அவருடன் தங்கை ரோலில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, எந்த ரோல்வேண்டுமானாலும் ஓகே தான் என்று ஓபனாக பேசியுள்ளார்.