தப்பா தொடுவாங்க.. அந்த மாதிரியான டார்ச்சர் இருக்கும்!! 19 வயதான அனிகா ஓபன் டாக்..

Indian Actress Anikha Surendran Tamil Actress Actress
By Dhiviyarajan May 20, 2024 04:26 AM GMT
Report

கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

கடந்த ஆண்டு அனிகா ஹீரோயினாக நடித்து இரண்டு படங்கள் வெளிவந்தது. அந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தப்பா தொடுவாங்க.. அந்த மாதிரியான டார்ச்சர் இருக்கும்!! 19 வயதான அனிகா ஓபன் டாக்.. | Anikha Surendran Talk About Sexual Harassment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அனிகா, "PT சார் படத்தில் நடிக்க முக்கியமான காரணம் பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசி இருப்பார்கள். பேருந்தில் பெண்களை தவறாக தொடுவார்கள், டார்ச்சர் செய்வார்கள் சில பெண்கள் இந்த விஷயங்களை அவர்களது பெற்றோர்களிடம் சொல்லமாட்டார்கள். தினமும் இது மாதிரியான விஷயங்கள் நடக்கின்றன.

ஆனால் எனக்கு அந்த மாதிரியான அனுபவங்கள் நடந்தது இல்லை. நான் எப்போதும் அம்மா கூட தான் இருப்பேன் என்று அனிகா தெரிவித்துள்ளார்.