கோவாவில் காதலனுடன் அனிமல் பட நடிகை திரிப்டி திம்ரி? வைரலாகும் புகைப்படங்கள்

Actress Tripti Dimri
By Kathick Jul 06, 2025 10:30 AM GMT
Report

சந்தீப் வங்கா ரெட்டி அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திரிப்டி திம்ரி, தற்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பிரிட்டி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

கோவாவில் காதலனுடன் அனிமல் பட நடிகை திரிப்டி திம்ரி? வைரலாகும் புகைப்படங்கள் | Animal Movie Fame Tripti Dimri Goa Vacation Photos

அனிமல் படத்தின் வெற்றிக்கு இவருக்கு தனி வரவேற்பை உண்டாக்கியது. இதன்பின் பாலிவுட் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். மேலும் சம்பளமும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. நடிகை திரிப்டி திம்ரி Sam Merchant என்பவரை காதலித்து வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உறுதிசெய்யப்படவில்லை.

இளம் கிளாமர் குயினாக வலம் வரும் திரிப்டி திம்ரி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலங்களில் ஒருவர். இவர் தற்போது தனது விடுமுறை நாட்களை கழிக்க கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கோவாவில் காதலனுடன் அனிமல் பட நடிகை திரிப்டி திம்ரி? வைரலாகும் புகைப்படங்கள் | Animal Movie Fame Tripti Dimri Goa Vacation Photos

இந்த நிலையில், கிசுகிசுக்கப்படும் காதலனுடன் திரிப்டி திம்ரி கோவாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery