திருமாங்கல்யம் எபிசோட் அப்டேட்: மெட்டியை மீட்டுக் கொடுத்த வருண்... பசி மயக்கத்தில் சரிந்ததால் பதறிய மகா!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்‘திருமாங்கல்யம்’ தொடர், அடுத்தடுத்து வரும் சுவாரஸ்யமான திருப்பங்களால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்திய எபிசோடில் மெட்டியைச் சுற்றி நடந்த கலாட்டாக்களும், வருண் மயங்கி விழுந்ததால் ஏற்பட்ட பரபரப்பும் இடம்பெற்றுள்ளன.
மெட்டியைத் தேடி அலையும் மகா... கிரெடிட் எடுத்துக்கொண்ட கிளி!
தொலைந்து போன தன்னுடைய மெட்டியை எங்கு தேடியும் கிடைக்காததால் மகா தவித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது, குப்பைகளைக் கிளறித் தேடி வருண் மெட்டியைக் கண்டுபிடிக்கிறான்.
ஆனால், அங்கிருக்கும் கிளியோ, “நான்தான் குப்பையெல்லாம் சுத்தம் பண்ணி மெட்டியைக் கண்டுபிடிச்சேன்” என்று வருண் செய்த வேலையைத் தானே செய்ததுபோலப் பேசுகிறது. இதனால் வருணுக்கும் கிளிக்கும் இடையே சுவாரஸ்யமான வாக்குவாதம் நடக்கிறது.
ஒருவழியாக மெட்டியைக் கண்டுபிடித்துக் கொடுத்த வருணுக்கு மகா நன்றி சொல்கிறாள். அவள் சொன்ன அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும் சந்தோஷமடையும் வருண், மீண்டும் அவளிடம் ஓடிவந்து செல்லமாகச் சண்டை போடுகிறான். இந்தக் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றன.

பசி தாங்காமல் மயங்கி விழுந்த வருண்!
இதற்கிடையில், பசியாக இருப்பதாகச் சொல்லி வருண் சாப்பாடு கேட்கிறான். ஆனால், மகாவோ அவனுக்குச் சமைத்துப் போட மறுத்து விடுகிறாள். இந்த நிலையில், மகா மெட்டியை மீண்டும் அணிந்து கொள்ளும் நேரத்தில் திடீரெனப் பெரிய சத்தம் கேட்கிறது.
என்ன நடந்தது என்று பதறிப்போய்ப் பார்த்தால், வருண் மயங்கி விழுந்து கிடக்கிறான். இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் மகா உள்ளிட்ட அனைவரும் ஓடிவந்து அவனை எழுப்ப முயற்சி செய்கின்றனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை.
உடனே மருத்துவரை வரவழைத்து வருணைப் பரிசோதிக்கின்றனர். அப்போது, “இவர் கடந்த இரண்டு, மூன்று நாட்களாகச் சரியாகச் சாப்பிடவே இல்லை. அதனால் ஏற்பட்ட உடல் பலவீனத்தில் தான் மயங்கி விழுந்திருக்கிறார்” என்று மருத்துவர் சொல்கிறார்.
இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது கிளியும், “ஆமாம், இவன் சாப்பிடவே இல்லை” என்று மருத்துவர் சொன்னதை ஆமோதிக்கிறது.
சாப்பாடு பரிமாறிய மகா... அம்மா மீது சத்தியம் செய்த வருண்!
மருத்துவர் சென்ற பிறகு, தாத்தா சொன்னதன்படி மகா வருணுக்குப் சாப்பாடு பரிமாறுகிறாள். இதனால் சந்தோஷமடையும் வருண், “பார்த்தாயா, உன் கையாலேயே சாப்பாடு பரிமாற வச்சிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடுகிறான்.
அதன்பிறகு, வருணை அங்கிருந்து கிளம்பிப் போகும்படி மகா சொல்கிறாள். ஆனால், அவனோ போக முடியாது என்று பிடிவாதமாக மறுக்கிறான். ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் வருண் ஒரு முடிவுக்கு வருகிறான்.
“சரி, நான் போறேன்... எங்க அம்மா மேல சத்தியமா இங்கிருந்து போயிடுறேன்” என்று வருண் சத்தியம் செய்து சொல்கிறான். இதைக் கேட்ட மகா, அவன் அம்மா மீது சத்தியம் செய்துவிட்டதால் நிச்சயம் கிளம்பிவிடுவான் என்று நிம்மதியடைகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.