மாளவிகா மோகனுக்கு போன் செய்து பீல் பண்ண அனிரூத்! இவங்களையும் விட்டுவைக்காத அனி
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. அப்படத்திற்கு முன் மலையாள நடிகையாக அறிமுகமாகி தெலுங்கிலும் நடித்து வந்தார் மாளவிகா மோகனன்.
பேட்ட படத்தில் சிறு ரோலாக இருந்தாலும் சரி நல்ல வரவேற்பு பெற்று நடிகர் அஜித்தின் மாஸ்டர் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வாய்ப்பு கிடைக்க போட்டோஷூட்டும் ஒரு காரணமாக அமைந்தது. இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை விஜய் ரசிகர்களுக்காகவே பதிவிட்டு வந்தார் மாளவிகா.
மாஸ்டர் படத்திற்கு பிறகு தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் மாறன் படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மாளவிகா மோகனன் இசையமைப்பாளர் அனிரூத் பற்றிய ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
மாஸ்டர் படம் வெளியாகும் சமயத்தில் லாக்டவுன் போட்டனர். இதனால் படக்குழு அனைவரும் இதை எண்ணி சோகத்தில் இருந்தோம். அப்போது அனிரூத் எனக்கு கால் செய்து பீல் பண்ணி பேசினார். இப்படி ஆயிடுசே என்றும் எல்லாம் சரியாகி பழையபடி வேலையை பார்ப்போம் என்று பேசியதை கூறியுள்ளார்.