மாட்டிக்கினாரு ஒருத்தரு.. காப்பியடித்து இந்தியன் 2 படத்திற்கு இசையமைத்த அனிருத்..வைரல் வீடியோ

Kamal Haasan Anirudh Ravichander Shankar Shanmugam
By Kathick Nov 04, 2023 03:01 AM GMT
Report

இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் இந்தியன். இப்படம் 1996ல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தியன் 2 மட்டுமின்றி இந்தியன் 3-யும் வருவதாக தகவல் கூறப்படுகிறது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நேற்று வெளிவந்த இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவில் வரும் அனிருத்தின் பின்னணி இசை பலருக்கும் பிடித்தது. ஆனால், அந்த பின்னணி இசையை அவர் காப்பியடித்து தான் போட்டுள்ளார் என வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை காப்பியடித்து தான் இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவிற்கு இசையமைத்துள்ளார் என்பது போல் வீடியோ வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..