இரவு பார்ட்டியில் நடிகைகளுடன் அனிருத்! இந்த லிஸ்ட்டில் அவரையே மிஞ்சுடுவார் அனி..
சினிமா பிரபலங்கள் படத்தின் வெற்றியாக இருக்கட்டும், பிறந்த நாளாக இருக்கட்டும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தி ஆட்டம் போட்டு கொண்டாடுவது வழக்கம். அப்படி பல பிரபலங்கள் இரவு பார்ட்டிக்கு சென்று விபரீத செயலில் சிக்கியும் ஒழுக்கமற்ற சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்கள்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி முன்னணி இடத்தினை பிடித்து வரும் அனிருத் ஆரம்பகால சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். 3 படத்தின் போது தனுஷ் கொடுத்த பார்ட்டியில் இருந்து பேட்ட படத்தின் பார்ட்டி வரை பல லீக் புகைப்படங்கள் அனிருத் சம்பந்தமான சீக்ரெட் செய்திகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
அதில் அவருடன் நெருக்கமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆண்ட்ரியா, ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ், ஜோனிடா காந்தி, மாளவிகா மோகனன் போன்ற முன்னணி நடிகைகளுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இந்த லிஸ்ட்டில் அனிருத் தனுஷைவிட மிஞ்சி விடுவாரே என்று ரசிகர்கள் கிண்டலடித்தும் வந்தனர்.