தலையை வெளிகாட்ட முடியவில்லை..ஆனா அங்க தான் செய்வேன்!! அனிருத்தின் ஆதங்கம்..

Anirudh Ravichander Coolie Kingdom
By Edward Aug 02, 2025 02:30 AM GMT
Report

அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் இசையில் சமீபகாலமாக பல படங்கள் ரிலீஸாகி வருகிறது. சமீபத்தில் அவர் இசையில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படமும் ரிலீஸாகியுள்ளது.

மேலும் அனிருத் இசையில் அடுத்தடுத்த படங்களும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், பேட்டியொன்றில், தன்னுடைய ஆசையை பற்றி கூறி ஆதங்கப்பட்டுள்ளார்.

தலையை வெளிகாட்ட முடியவில்லை..ஆனா அங்க தான் செய்வேன்!! அனிருத்தின் ஆதங்கம்.. | Anirudh Ravichander Recently Revealed His Wish

பேருந்தில் பயணம்

அதில், நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால், பேருந்தில் பயணம் செய்வேன். பள்ளி, கல்லூரி நாட்களில் எப்படி பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தேனோ அப்படி பயணம் செய்வேன்.

இதை இப்போது செய்ய முடியாததால், ரொம்பவே மிஸ் செய்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் என்னால் அங்கு பேருந்தில் செல்ல முடியும்.

ஆனால் என்னோட நாட்டில் நான் எப்போது கடந்து வந்த பாதையில் அப்படி பயணம் செய்வதை பெரிதும் விரும்புகிறேன் என்று தனது வித்தியாசமான ஆசையை ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் அனிருத்.