டாப் நடிகைகளை டேட்டிங் செய்த அனிருத்!.. அதுவும் இத்தனை பேரா?
தனுஷ் நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தற்போது அனிருத் டேட்டிங் செய்த டாப் நடிகைகளின் லிஸ்ட் நாம் பார்க்கலாம்.
பாடகி, நடிகை எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் ஆண்ட்ரியா. இவர் அனிருத் இடையே இசை ரீதியான நட்பு இருந்து கடைசியில் இருவரும் பார்ட்டி, ஃப்ங்க்ஷன் போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். இவர்கள் நெருக்கமா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் உடன் அனிருத் கிசுகிசுப்பில் சிக்கினார். ஆனால் இதை இருவரும் பொருட்படுத்தாமல் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
பிரியா ஆனந்த் அனிருத் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இதற்கு பிரியா ஆனந்த் நண்பர்கள் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
ஏ ஆர் ரகுமான், அனிருத் இசை அமைப்பில் பல பாடல்களை பாடியவர் தான் ஜொனிதா காந்தி. சமீபகாலமாக ஜொனிதா காந்தி, அனிருத் டேட்டிங் செல்வதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.