கோடியில் புரளும் நீங்களா இதை செய்! மும்பைக்கு ஓடிய அனிரூத்..

music anirudh tamilcinema
By Edward Jan 14, 2022 04:28 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிரூத். தற்போது பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படத்தின் இசையமைப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கோடியில் சம்பளம் வாங்கும் அனிரூத்தின் ஸ்டுடியோ அவருடையது இல்லையாம்.

வேறொருவர் துபாயில் இருப்பதால் அனிரூத்திற்கு 2 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த ஸ்டுடியோ வாடகை தொகையை கொடுக்காமல் இருந்து வருகிறாராம் அனிரூத். இதனால் கோபமடைந்த உரிமையாளர் நேரடியாகவே சென்னை வந்துவிட்டாராம்.

இதில் டிவிஸ்ட் என்னவென்றால் உரிமையாளர் சென்னை வந்த செய்தி அறிந்த இசையமைப்பாளர் அனிருத் மும்பைக்கு சென்று விட்டாராம். கோடியில் சம்பளம் வாங்கும் நீங்களே இப்படி செய்யலாமா அனி என்று விமர்சித்து வருகிறார்கள்.