திருமணம் குறித்த கேள்வி.. கடும் கோபத்தில் பதில் கொடுத்த அனிருத்
இந்திய அளவில் இன்றைய தேதியில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன், ஜெயிலர் 2, ரஜினி - கமல் படம், கிங், அல்லு அர்ஜுன் - அட்லீ படம் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவரவுள்ளது.

அனிருத்தின் திரை வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும், இவருக்கு எப்போது திருமணம் என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. பிரபல தொழிலதிபரின் மகளை இவர் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும், இருவரும் ஒன்றாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் கூட வைரலாவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவை யாவும் அனிருத் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அனிருத் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் "சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு இன்வைட் பண்ணுங்க" என சொல்கிறார். அதற்கு அனிருத் காட்டமாக "இது வேற.." என கூறிவிட்டு போகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.