மணிமேகலையால் நடுரோட்டில் நடந்த சம்பவம்.. ஓப்பனாக பேசிய அனிதா சம்பத்..

Bigg Boss Star Vijay Anitha Sampath Manimegalai
By Edward Feb 15, 2024 03:39 AM GMT
Report

தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் அனிதா சம்பத். ஒருசில படங்களிலும் நடித்து வந்த அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து 2019ல் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய போது, வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன்.

மணிமேகலையால் நடுரோட்டில் நடந்த சம்பவம்.. ஓப்பனாக பேசிய அனிதா சம்பத்.. | Anitha Sampath Auto Manimegala Mis Consumed

பின் அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னிடம் அம்மா உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று கேட்க, ஆமாம் நான் செய்தி வாசிப்பாளர். டிவியில் வேலை செஞ்சிட்டு இருக்கிறேன் என்று கூறினேன். நீங்கள் சன் மியூசிக்கில் வரும் மணிமேகலை தானே என்று அவர் சொன்னதும் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. என்னை வேறொரு பிரபலம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி எத்தனை பேர் இதுபோல் என்னை நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் அனிதா.

மேலும் ஒரு நால் அலுவலகத்தில் இருந்து சென்று கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் வண்டியில் வந்து அருகில் திடீரென நிறுத்தினார்கள். ஒருவன் வேகமாக இறங்கி உங்களிடம் செல்ஃபி எடுக்கனும் என்று கேட்டான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நாம் அந்த அளவிற்கு பிரபலம் கிடையாதே, இவர்கள் வேறு செல்ஃபி எடுக்கனும் என்று கேட்கிறார்களே, அந்த பையனை பார்த்தால் ரவுடி போல் இருந்ததால் பயமாகவும் இருந்தது. உடனே அவனுடைய நண்பனிடம் டேய்.. சீக்கிரம் வாடா.. சன் மியூசிக் மணிமேகலை வந்திருக்கிறாங்க என்று செல்ஃபி எடுக்க அழைத்தான். நான் அப்படியே ஷாக்காகிவிட்டேன். பின் அவனிடம் நான் மணிமேகலை கிடையாது, நான் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்ததாக தெரிவித்தார் அனிதா சம்பத்.