கணவரை வைத்து முகம்சுழிக்க வைக்கும் கருத்து! மனைவி பற்றி பேசி பதிலடி கொடுத்த பிக்பாஸ் அனிதா
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி புகழ் பெற்றவர் அனிதா சம்பத். காதல் திருமணம் செய்து கொண்ட அனிதா சம்பத் பல கஷ்டங்களை தாண்டி வாழ்ந்து வருகிறேன் என்று பேட்டிகளிலும் கூறி வந்தார்.
இதன்மூலம் மற்றொரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாகவும் பயன்படுத்தியும் சிலரால் விமர்சிக்கப்பட்டும் வந்தார். அவரை விமர்சிப்பதோடு அவரது கணவர் குடும்பம் பற்றி சமுகவலைத்தளத்தில் அசிங்கப்படுத்தியும் வந்தனர்.
பெண் போட்டியாளர்களின் நடவடிக்கையை கடுமையாக கிண்டல் செய்தும் அசிங்கப்படுத்தி வந்துள்ளனர். தந்தையின் மரணத்திற்கு பிறகு பேட்டி நிகழ்ச்சி என கலந்து கொள்ளாமல் இருந்த அனிதா தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர் ஷாரிக் ஹாசனுடன் ஜோடி போட்டு நடமாடியுள்ளதை இணையத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத்.
தனது தம்பியுடன் நடமாடுவது மகிழ்ச்சி என்ற பதிவுடன் பதிவிட்டதை ஒரு நபர் முகம் சுழிக்க வைக்கும் வார்த்தையில் கடுமையாக விமர்சித்துள்ளார். கேவலமா இல்லயா கண்டவன் கூட நிக்ரத பெருமையா போட்ருக்க இத பாத்துமா உன் புருஷன் உசுரோட இருகான் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை பார்த்து பதிலடி கொடுத்த அனிதா சம்பத், உன் பெட் ரூம பாரு. நீ இன்ஸ்டால என்ன திட்டி மெசேஜ் பண்ற கேப்ல உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போய்டா போறாங்க என்று கேவளமாக பேசியுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து பதில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
