அந்த நடிகரால் தான் வாழ்க்கையை பாழாய் போச்சா!! காதல் உறவு பற்றி ஓப்பன் செய்த அஞ்சலி
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான படம் கற்றது தமிழ், இப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டுநடித்து பிரபலமானார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று.
அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.
அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஞ்சலி வாய்ப்பில்லாமல் வாழ்க்கை பாழானதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து FALL படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக் கொடுத்த போது இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
நான் காதலிக்கிறேன் என்று யாரிடமும் கூறியதில்லை. சினிமாவில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் பலர் அப்படித்தான் எழுதுவார்கள்.
அதை பற்றி நான் எதையும் பேசியதும் இல்லை பேச விருப்பமும் இல்லை. அதை நான் செய்தால் தானே அதை பற்றி நான் கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.