39 வயதிலும் திருமணத்திற்கு நோ.. அஞ்சலி யாருடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் பாருங்க

Anjali Viral Photos Actress
By Bhavya Jun 17, 2025 01:30 PM GMT
Report

அஞ்சலி 

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.

39 வயதிலும் திருமணத்திற்கு நோ.. அஞ்சலி யாருடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் பாருங்க | Anjali Birthday Celebration With Pet Goes Viral

அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் 'ஏழு கடல் ஏழு மலை' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வைரல் போட்டோ 

இந்நிலையில், நடிகை அஞ்சலி நேற்று அவரது 39 வது பிறந்தநாளை செல்ல நாய் குட்டியுடன் கொண்டாடியுள்ளார்.

அதில், தனது நாய் குட்டியை கட்டி பிடித்துக் கொண்டு அவர் கொண்டாடும் போட்டோவை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.