நடிகை அஞ்சலியா இது? சமந்தாவின் ஓ சொல்றியா மாமாவை ஓரங்கட்ட இப்படியொரு குத்தாட்டம் ?

Anjali Samantha Pushpa: The Rise
By Edward Jul 04, 2022 04:21 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபடமாக மாறியது கற்றது தமிழ். இப்படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்ற நடிகை அஞ்சலி.

இப்படம் கொடுத்த வாய்ப்பினால் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அளவிற்கு புகழ் பெற்றார். பெரிய பட்ஜெட் படமில்லாமல் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அஞ்சலி வாய்ப்பு கிடைக்காமல் வெப் தொடரில் படுமோசமான காட்சியில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

இதன்பின் வக்கீல் சாப், பைராகி போன்ற படங்களில் நடித்துள்ள அஞ்சலி நடிகர் ராம் சரண் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகும் ஆர்சி 15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஓ சொல்றியா மாமா பாடல் நடிகை சமந்தாவின் குத்தாட்டம் மிகப்பெரியளவில் வைரலானதை அடுத்து நடிகை அஞ்சலி Macherla Niyojakavargam படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார். அதன் வீடியோ சீக்கிரம் வெளியாகும் நிலையில் அஞ்சலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


GalleryGallery