அந்த வில்லன் என்னை torture செய்து தவறாக நடக்க முயன்றார்.. அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த பிரபல நடிகை
மலையாள திரைப்படங்களில் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி நாயர். இவர் தமிழில் மாமனிதன், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2011 -ம் ஆண்டு அனீஷ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து இவர் அஜித் என்கிற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தவறாக நடத்தினார்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலி நாயர் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தேன்.
என் முதல் தமிழ் படத்தின் வில்லன் என்னை தவறாக நடத்த முயன்றார். அவர் அந்த படத்தின் துணை தயாரிப்பாளராகவும் இருந்தார். ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்.
மேலும் நான் செல்லும் இடமெல்லாம் வந்து என்னை torture செய்வார். ஒருமுறை நான் வைத்திருந்த பையை பிடுங்கி சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அவர், 'பை வேண்டுமென்றால் வீட்டுக்கு வா' என்று அழைத்தார். நான் அப்போது கேரளாவில் உள்ள என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இது குறித்து என்னுடைய நண்பர்களிடம் சொன்னேன் " என அஞ்சலி நாயர் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
