ரயிலில் குழந்தையுடன் மாட்டிய கார்த்திக்!! அஜித் படத்தில் கண்ணீர்விட்ட 2000 பேர்...
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவரான நவரச நாயகன் கார்த்திக் பற்றி சமீபகாலமாக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பேசி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மெய்தீன் அளித்த பேட்டியொன்றில் முக்கியமாக ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த பூங்காற்றே
அதில், இயக்குநர் ராஜ்கபூர் இயக்கத்தில் 1999ல் அஜித் - மீனா நடிப்பில் ஆனந்த பூங்காற்றே படம் ரிலீஸானது. அப்படத்தில் கார்த்திக் ஒரு முழுநீள கேமியோ ரோலில் நடித்தார்.
பாட்டு வாத்தியாராக இருக்கும் கார்த்தியிடம், பாட்டு கற்றுக்கொள்ள வரும் மீனா, அவர்மீது காதலில் இருக்கிறார் என்று மீனாவின் அப்பா விஜயகுமார் தவறாக நினைத்துவிடுவார்.
இதனால் கார்த்திக் ஊரைவிட்டே கிளம்பும்போது அவரை கொலை செய்ய விஜயகுமார் ஆட்களை அனுப்புவார். இதை தெரிந்துகொண்ட மீனா அவரை காப்பாற்ற வரும்போது கார்த்திக்-ஐ குத்திவிடுவார்கள்.

ரயிலில் குழந்தையுடன் மாட்டிய கார்த்திக்
அப்போது கார்த்திக் தன்னுடைய மகனுடன் ரயில்வே ட்ராக்கில் மாட்டிக்கொள்வார். அதன்பின் மீனா வந்து அந்த குழந்தையை மீட்டுவிட கார்த்திக் இறப்பார்.
இந்த காட்சி படமாக்கும்போது கார்த்திக் அந்த குழந்தையுடன், ரயில்வே ட்ராக்கில் மாட்டிக்கொள்ளும்போது ரயில் அவரை நெருங்கி வரும், ஜெஸ்ட் மிஸ்ஸில் அவர் ஜம்ப்பாகி வெளியில் வந்துவிடுவார். இந்த காட்சி படமாக்கும்போது அங்கு கூடியிருந்த 2000 பேர் பதறினார்கள்.
காட்சி முடிந்தவுடன் அனைவருமே கண்ணீர் விட்டனர். கார்த்திக் வந்தாலே சிங்கிள் டேக்தான், ஒரு சீன் கூட ரீடேக் வாங்காத நடிகர் கார்த்திக் என்று காஜா மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.