லிப்லாக்-க்கு ஓகே அந்த காட்சியா வேண்டவே வேண்டாம்!! கேரவனில் அழுத நடிகை அஞ்சலி கூறிய உண்மை..

Anjali Gossip Today Actress
By Edward Jun 06, 2023 05:00 PM GMT
Report

தமிழில் சினிமாவில் அங்காடி தெரு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அஞ்சலி நடிகர் ஜெய்யிடம் காதலில் இருந்து வந்தார். சில காரணங்களால் ஜெய் பக்கமே போகாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் லிப்லாக் சீன் அல்லது நெருக்கமாக சீனில் எது டஃப் அல்லது முகம் சுளிக்க வைக்கிறது என்ற கேள்விக்கு நெருக்கமான சீன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

நெருக்கமான காட்சின்னா எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். சில நேரங்களில் கேரவனில் போய் அழுதுட்டு வந்ததெல்லாம் நடந்திருக்கு. லிப்லாக்-னா இதுக்கு மேல போகும்றது நமக்கு தெரியும்.

என்னதான் நமக்கு பிடிக்காதவர் நம்ம தொடுகிறார் என்று எடுத்துக் கொள்ளமுடியாது ஷூட்டிங்கில் 50 பேர் இருந்தாலும், நடிகர் எப்படியானவர் என்று தெரியாது, சமீபத்தில் கூட அந்த சம்பவம் நடந்து இருக்கு, அதனால் லிப்லாக்கில் நடிப்பது ஆறுதலான இருக்கும் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.