8 மணிநேரம் பேசினோம்..விவாகரத்துக்கு இதான் காரணம்!! யூடியூபர் அஞ்சலி பிரபாகரன் ஓபன் டாக்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் பிரபாகரன். சில ஆண்டுகளுக்கு அஞ்சலி என்பரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இருவரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்கள்.

அஞ்சலி பிரபாகரன்
இந்நிலையில் கடந்த ஆண்டு நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இதை நாங்கள் பப்ளிசிட்டிக்காக இதை செய்யவில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் என் மகனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அஞ்சலி ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து குறித்து வெளியாகும் கமெண்ட்ஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், ஒருசில காரணத்திற்காக அமைதியாக போகணும். அது குறிப்பிட்ட டைமில் முடியவில்லை. 8 வருடம் நண்பர்களாக இருந்தோம். ஒரு விஷயத்திற்கு என்ன தீர்வு கிடைக்கும் என்று பார்க்கும் போது பிரிந்துவிடலாம் என்று தோன்றியது. பப்ளிசிட்டிக்காகவும், பிக்பாஸ் போவதற்காகவும் மக்கள் சொல்றாங்க, மக்களுக்கு என்ன இரண்டு பேரும் அடித்துக் கொண்டு மாத்தி மாத்தி வீடியோ போடணும் நினைக்குறாங்க, என் மகனுக்காக தான் இந்த முடிவெடுத்தேன்.

கிட்டத்தட்ட ஒரு 8 மணிநேரம் இருவரும் பேசித்தான் விவாகரத்து போஸ்ட் போட்டோம். இருவரும் தனித்தனி யூடியூப் சேனல் வைத்துள்ளோம், அங்கு வந்து பலரும் கேள்வி கேட்பார்கள், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் அந்த போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் அஞ்சலி.