படுக்கை அழைத்து தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்.. பயில்வான் சொன்ன தகவல்!!
பிரபல ஹிந்தி சீரியல் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அங்கிதா லோகாண்டே. இவர் பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி தொடரில் சுஷாந்த் சிங் உடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர். அதன் பின் அங்கிதா லோகாண்டே விக்கி ஜெயின் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அங்கிதா லோகாண்டே பேட்டி ஒன்றில் , பிரபல திரைப்பட தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அந்த சமயத்தில் எனக்கு வயது 19 தான் இருக்கும். நான் அவர்களை திட்டிவிட்டு அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று அங்கிதா லோகாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், "மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே, தயாரிப்பாளர்கள் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று பேட்டியில் கூறினார். ஆனால் யார் படுக்கைக்கு அழைத்தார் என்பதை பற்றி சொல்லவில்லை".
"யார் அப்படி அழைத்தார் என்பதை தைரியமாக சொல்லவேண்டும். அதை சொல்வதில் என்ன தயக்கம். எதற்கு மூடி மறைச்சி பேசுறீங்க" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.