யார் கண்ணு பட்டுச்சோ? அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை..

annapoorani ladysaamiyar
By Jai Dec 27, 2021 07:00 AM GMT
Report
122 Shares

ஆன்மீகம் என்ற பெயரில் பல போலி சாமியார்களாக உருவெடுத்த மக்களை ஏமாற்றுவதை பார்த்திருப்போம். ஆனால் அதையே தவிடுபொடியாக மாற்றியுள்ளார் ஆதிபராசக்தியின் அவதாரம் அன்னபூரணி. சில வருடங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளகாதல் விவகாரத்தில் கலந்து கொண்டவர் அன்னபூரணி.

அரசு என்பவருடன் கள்ளக்காதலில் இருந்து அவரை விடாமல் போராடி வாழ்ந்து வந்துள்ளார் அன்னபூரணி. செங்கல்பட்டு பகுதியில் பலருக்கு மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து வழங்கி குணப்படுத்தியதாக அங்குள்ள மக்கள் கூறியது பகீர் கிளப்பியுள்ளது. இதுகுறித்து திடீரென இணையத்தில் அன்னபூரணி பற்றி செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்காதலியாக இருந்து ஆதிபராசக்தியின் அவதாரம் எடுத்தது பற்றியது தான் இந்த நேர டிரெண்டிங். இதுகுறித்து விசாரித்ததில், செங்கல்பட்டு நேரு நகர் என்ற பகுதியில் இருக்கும் வாசுகி திருமண மண்டபத்தில் வருகிற புத்தாண்டு அன்று அருள் வாக்கு சொல்லவிருப்பதாக போலிசாருக்கு தெரியவந்துள்ளது.

அங்கு விரைந்த போலிசார் அந்த மண்டத்தில் இப்படியான நிகழ்வு நடத்த கூடாது என்று எச்சரித்து வந்துள்ளனர். அதைமீறி நடத்த அனுமதித்தால் உரிமையாளர் மீது முதல் குற்றவாளியாக வழக்கு போடப்படும் என்றும் கூறி எச்சரித்துள்ளனர் போலிசார். யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை ஆதிபராசக்தி அன்னபூரணி இப்படியொரு நிலை..