அறைக்கு வரலாமான்னு கேட்டேன்!! தூங்கும்போது நடிகர் கேட்ட ஒரு கேள்வி..ஷகீலா ஓபன்

Shakeela Gossip Today Actors Tamil Actress
By Jai Jul 03, 2026 02:30 AM GMT
Report

ஷகீலா

நடிகை ஷகீலாவிற்கும் மறைந்த நடிகர் வேணு மாதவுக்கும் இடையே நடந்த ஒரு சம்பவத்தை நடிகை ஷகீலா சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். ஷகீலா, வேணு மாதவ், பிரம்மானந்தம், ரகுபாபு அனைவரும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அறைக்கு வரலாமான்னு கேட்டேன்!! தூங்கும்போது நடிகர் கேட்ட ஒரு கேள்வி..ஷகீலா ஓபன் | Shakeela Shares A Hilarious Night With Venu Madhav

மற்ற நடிகர்கள் அனைவரும் ஷகீலாவின் அறையில் சாப்பிட்டதால் அந்த அறை அலங்கோலமாக இருந்துள்ளது. தூக்கம் வராததால் ஷகீலா, வேணு மாதவ் ரூமில் தங்கலாமா என்று கேட்டுள்ளார். வேணு மாதவும் தயக்கமில்லாமல் ஷகீலாவை வருமாறு கூறியிருக்கிறார்.

வேணு மாதவ்

அறையின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது, வேணு மாதவ், ஷகீலாவிடம், நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா மறுக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

ஷகீலாவுக்கோ, வேணு நம் நல்ல நண்பர் என்றாலும் அவன் ஏதாவது தவறாக நடந்துகொள்வானா? என்று நினைத்து, அப்படி தவறாக ஏதாவது கேட்டால், அந்த நட்பை முறித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்துள்ளார்.

அறைக்கு வரலாமான்னு கேட்டேன்!! தூங்கும்போது நடிகர் கேட்ட ஒரு கேள்வி..ஷகீலா ஓபன் | Shakeela Shares A Hilarious Night With Venu Madhav

என்ன என்று ஷகீலா அவரிடம் கேட்க, எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் நலமாக இருக்க நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றார். என்ன பிரச்சனை என்று ஷகீலா கேட்க, நீ தூக்கத்தில் தவறுதலாக என் மீது கால் வைத்துவிட்டால், நான் இறந்துவிடுவேன்.

அதனால்தான் நமக்கிடையில் இந்த தலையணையை வைத்துள்ளேன், அவற்றின் மீது கால் வைத்துக்கொள் என்று கூறியிருக்கிறார் வேணு மாதவ். இதனை கேட்டப்பின் தன்னால் சிரிப்பை இரவு முழுவதும் அடக்கமுடியவில்லை. இதை பிரம்மானந்தம், ரகுபாபுவிடமும் சொல்லி அனைவரும் சிரித்தோம், வேணு மாதவ் அப்படிப்பட்ட அப்பாவி, நகைச்சுவை உணர்வுடையவர் என்று ஷகீலா பகிர்ந்துள்ளார்.