என்னடா சொல்றீங்க! என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

boxoffice annaatthe
By Jai Nov 13, 2021 07:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பெரிதாக பேசப்படும் செய்தி சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தான். கடந்த 4 தீபாவளி அன்று இயக்குநர் சிறுத்தை சிவா, ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ், நயன் தாரா, குஷ்பூ, மீனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் கூட்டுகுடும்பமாக நடித்து வெளியானது.

முதல் நாள் வசூலே 70 கோடி என்று கூறிய நிலையில் 4ஆம் நாள் வசூல் 100 கோடிக்கு மேல் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 7 நாட்கள் நிறைவுற்ற நிலையில் 200 கோடியை நெருங்கியுள்ளது என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகியுள்ளது. தமிழ் நாட்டில் மொத்தம் 119 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் ஒருசிலர் கலாய்த்து எம்புட்டு கோடி என்று மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.