அஜித்தை வைத்து அப்பா-மகள்! அட்டர் காப்பியா அண்ணாத்த? ரஜினி நயன் கீர்த்தி ரசிகர்கள் ஷாக்..

Nayanthara Rajinikanth Annaatthe Tamilactress Keerthysuresh
By Edward Oct 28, 2021 05:29 AM GMT
Report

உலக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இரண்டாம் முறையாக ஜோடி போட்டு நடித்து வெளியாக இருக்கும் படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் இமான் இசையில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாக்கி பல ரசிகர்களை ஈர்த்துத்துள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ட்ரைலரை பார்த்த சிலர் அட்டர் காப்பி விசுவாசம் தான் என்று கூறி வருகிறார்கள். விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் பாசம் என்றால், அண்ணாத்த படத்தில் அண்ணன் தங்கை பாசம்.

விஸ்வாசம் படத்தை போலவே அண்ணாத்த படத்திலும் ஒரே வில்லன், ஒரே நாயகி. இதைவிட முக்கியமான ஒன்று விஸ்வாசம் படம் எப்படி கிராமத்தில் தொடங்கி நகரத்தில் முடிகிறதோ அதேபோல் அண்ணாத்த படமும் உள்ளது. இசை மற்றும் காட்சிகள் கூட அதேபோல் இருப்பதும் பாடலும் ஒருத்துளி கூட மாறாமல் இருப்பதும் இருக்கிறது.

மேலும், என்ன அதில் அஜித் மும்பை செல்வார் இதில் ரஜினி கல்கத்தா செல்வார் அவ்வளவு தான் வித்தியாசம். நன்றாக பார்த்தால் ஏற்கனவே சுட்ட தோசையை திருப்பி சுட்டுள்ளார் சிவா.

இரண்டு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமை உள்ள நிலையில் எப்படி அண்ணாத்த படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடும் என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும் முற்றிலும் குடும்ப கதைக்கலமாக இருப்பதால் மக்கள் தியேட்டரில் வந்து பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.