இந்த வயசுல இதெல்லாம் தேவையா? சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுக்கும் அண்ணாச்சி..
சரவணா ஸ்டோர்ஸ் ஓனராக இருந்து தற்போதி தி லிஜெண்ட் படத்தில் நடித்துள்ளார் அண்ணாச்சி அருள் சரவணா. இன்று சுமார் 2000க்கும் மேல் இருக்கும் தியேட்டர்களில் வெளியாகியுள்ள படமாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
அப்போது பத்திரிக்கையாளர்கள் 50 வயசுல நடிப்பு தேவையா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அண்ணாச்சி, இந்தியில் அமிதாப் பச்சன் கூட இந்த வயசுலயும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற மூத்த நடிகர்கள் இந்த வயதிலும் நடித்து வருகிறார்கள்.
அப்படியிருக்கும் போது என்னிடம் மட்டும் கேட்கிறீர்கள். அவர்களிடமும் கேட்க வேண்டியது தானே, என்று சாமர்த்தியமாக பதிலளித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ஸ்டைலை பின்பற்றுவது போல் தெரிகிறது என்று கேட்டதற்கு, சின்ன வயதில் இருந்து அவரது ஸ்டைலை பார்த்து வருவதால் என்னை மீறி அது தானாகவே வந்துவிடுகிறது என்றும் கூறியுள்ளார். அண்ணாச்சி இப்படத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் என்றும் கூறப்படுகிறது.