டாக்சிக் 100 கோடி வசூலா..பெண்களுக்கு மரியாதை கொடுக்கல!! கொட்டித்தீர்த்த அண்ணாமலை..

Nayanthara K. Annamalai Yash Gossip Today Toxic
By Jai Aug 28, 2026 06:00 AM GMT
Report

அண்ணாமலை

வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்சிக் படத்தினை மறைமுகமாக தாக்கி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், ஒரு படத்தை பற்றி கேள்விப்பட்டேன். இரண்டு விதமான கருத்து. அந்த படத்தை நான் சொன்னால் என்மீது வழக்கு போட்டுவிடுவார்கள்.

டாக்சிக் 100 கோடி வசூலா..பெண்களுக்கு மரியாதை கொடுக்கல!! கொட்டித்தீர்த்த அண்ணாமலை.. | Annamalai Raises Concerns Regarding The Toxic

ஏற்கனவே என்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. எனவே படத்தின் பெயரை சொல்லாமலே சொல்கிறேன். அப்படம் நேற்று தான் ரிலீஸாச்சு. என் டி டிவியில் பார்த்தேன் முதல் நாளிலேயே ரூ. 104 கோடி வசூலித்துள்ளதாம். ஒரு பெரிய நடிகர் நடித்த படம் அது.

அப்படம் முதல் நாளிலேயே ரூ. 104 கோடி வசூல். அப்படத்திற்கு பெயரையே நீங்க பார்த்தீர்கள் என்றால், டாக்சிக்கா நாம் பல விஷயங்களில் பேசுகிறோம், அதையே அவர்கள் பெயராக வைத்துள்ளார்கள்.

டாக்சிக் 100 கோடி வசூலா..பெண்களுக்கு மரியாதை கொடுக்கல!! கொட்டித்தீர்த்த அண்ணாமலை.. | Annamalai Raises Concerns Regarding The Toxic

பெண்களுக்கு மரியாதை

அப்போதுதான் நான் பார்த்தேன், படத்தில் நீங்க பெண்களை சித்தரிக்கின்ற விஷயத்தினை சொல்லி, அதை முதல் நாளில் ரூ. 104 கோடி வசூல் செய்ய வைத்து, அதை வந்து ஒரு, ஒரு நாளும் நம் குழந்தைகளை, நம் மாணவர்களை பார்க்க வைத்தால், நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்க நடக்கும்?

நாம் எல்லாம் ஊர் ஊராக கல்லூரியாக சென்று தொண்டைத்தண்ணி வத்த நாம் பேசுகிறோம். ஆனால் ஒரு படத்தை எடுக்கிறார்கள், சென்சாரிலும் கிளியர் பண்றாங்க, தியேட்டருக்கும் கொண்டு வர்றாங்க. அப்படத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் உரிமை மரியாதை கொடுக்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.