நண்பரை கணவனாக தேர்ந்தெடுப்பது சிறந்தது!! நடிகை எமி ஜாக்சன் எமோஷனல்..

Amy Jackson Indian Actress Marriage Tamil Actress Actress
By Jai Aug 28, 2026 02:30 AM GMT
Report

எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம், 2.0, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்த எமி, ஜார்ன் என்பவரை காதலிக்கும் போது கர்ப்பமாகி அதன்பின் நிச்சயதார்த்தம் செய்தார்.

நண்பரை கணவனாக தேர்ந்தெடுப்பது சிறந்தது!! நடிகை எமி ஜாக்சன் எமோஷனல்.. | Amy Jackson Says Best Choose A Friend As A Husband

ஆண் குழந்தை பிறந்த 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் 2024ல் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2025ல் ஒரு ஆண் குழந்தை பிறந்து, அவருக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் என்ற பெயரையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய 2வது திருமண நாளை கொண்டாடியுள்ள எமி ஜான்சன், தன் கணவர் பற்றி பகிர்ந்துள்ளார்.

நண்பரை கணவனாக தேர்ந்தெடுப்பது சிறந்தது!! நடிகை எமி ஜாக்சன் எமோஷனல்.. | Amy Jackson Says Best Choose A Friend As A Husband

நண்பரை கணவனாக

அதில், நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது சிறந்தது என்று இப்போது புரிகிறது. அன்பு, குழந்தைகள், சாகசங்கள், சற்று குழப்பமான முடிவுகள், அளவுக்கடந்த மகிழ்ச்சி என இந்த 2 ஆண்டுகள் கடந்திருக்கிறது. இந்த வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.