படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அண்ணாத்த'விற்கு தடையா ? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
annaththe
By Jeeva
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளி ரிலீஸிற்காக காத்திருக்கும் படம் அண்ணாத்த.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. படத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவராக வரும் ரஜினி பஞ்ச் டைலாக்'களை பேசி ட்ரைலரில் அசத்தியிருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் குடும்பங்கள் விரும்பும் அண்ணாத்த'யை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தனது பேரன்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார் ரஜினி, அந்த புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்திருக்கிறது.