நீ என் வாழ்க்கைக்கு தேவையில்லை!! அன்ஷிதாவை காயப்படுத்திய நபர் இவரா? வெளியான தகவல்..

Gossip Today Bigg Boss Tamil 8 Arnav Amjath Anshitha Akbarsha
By Edward Jan 22, 2025 10:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது. இதனையடுத்து என்னை காயப்படுத்தி அனுப்பிய ஒரு நபரின் வீட்டுக்கே சென்று, நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக கூறிவிட்டேன் என்று கூறியதாக அன்ஷிதா ஃபினாலே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

நீ என் வாழ்க்கைக்கு தேவையில்லை!! அன்ஷிதாவை காயப்படுத்திய நபர் இவரா? வெளியான தகவல்.. | Anshitha Recent Issue With Her Boy Friend Biggboss

அவர் யார் என்று கூறாவிட்டாலும் சுட்டிக்காட்டிய நபர் அர்னவ் தான் என்று பலரும் கூறினர். சில ஆண்டுகளுக்கு முன் அர்னவ் மனைவி திவ்யா இடயே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன், மீடியா வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அர்னவ், திவ்யா, அன்ஷிதா மூவரும் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பரவியது.

அதில், ஆமா அர்னவ் கூடத்தான் நான் இருப்பேன், உன்னால என்ன செய்யமுடியும் என்று திவ்யாவிடம் அன்ஷிதா பேசியதும் வைரலானது. ஒருக்கட்டத்தில் திவ்யா அர்னவை பிரிந்து தனியே வாழத்துவங்கி குழந்தையை பெற்றுவிட்டார்.

அன்ஷிதாவை காயப்படுத்திய நபர்

இதுகுறித்து அன்ஷிதா - அர்னவ் இருவருக்கும் பொதுவான சிலர் கொடுத்த தகவல் தற்போது லீக்காகியுள்ளது. அர்னவ் திவ்யா, அன்ஷிதா முக்கோணச்சண்டை வளர்ந்து கோர்ட் வரை சென்ற போது கடைசி சில மாதங்களுக்கு முன் கோர்ட்டில் ஆஜாரானார் அர்னவ்.

நீ என் வாழ்க்கைக்கு தேவையில்லை!! அன்ஷிதாவை காயப்படுத்திய நபர் இவரா? வெளியான தகவல்.. | Anshitha Recent Issue With Her Boy Friend Biggboss

அப்போது அன்ஷிதாவும் உடன் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன் கூட இருவருக்கும் பிரச்சனை இல்லை, அர்னவுக்கு அன்ஷிதா ரொம்பவும் சப்போர்ட்டா இருந்தார் என்றும் இது ஃபீல்ட்ல பரவலா தெரியும். ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போனப்பின் அந்த வீட்டில் என்ன நடந்துச்சு என்று தெரியவில்லை.

அர்னவ் இரண்டாவது வாரம் பிக்பாஸ் வீட்டுல இருந்து வெளியே வந்தார். அன்ஷிதாவோ 3வது வாரத்துல இருந்து தன் வாழ்க்கை மாறத்துவங்கிய என்று கூறினார். அந்த வீட்டுக்குள் என்ன நடந்துச்சோ தெரியவில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்.

நீ என் வாழ்க்கைக்கு தேவையில்லை!! அன்ஷிதாவை காயப்படுத்திய நபர் இவரா? வெளியான தகவல்.. | Anshitha Recent Issue With Her Boy Friend Biggboss

அர்னவ்வின் நட்பு

அர்னவ்வின் நட்பு வட்டாரத்தில் சிலர் அர்னவ்வுக்கு முன்பே அன்ஷிதாவுக்கு இன்னொரு நண்பர் இருந்தார், அவர் மலையாள சீரியலில் நடிச்சிட்டு இருந்ததாக சொன்னார்கள். அதனால அன்ஷிதா குறிப்பிட்டது அர்னவ் தான் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து அர்னவ் இடம் சிலர் கேட்ட போது கூட அவங்க பர்சனல் எனக்கு தெரியாது என்றும் அன்ஷிதாவிடம் நட்பு தொடர்கிறதா என்ற கேள்வி நோ கமெண்ட்ஸ் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் விஷாலுடன் காதல் என்றொரு பேச்சைக்கூட அன்ஷிதா மறுத்திருக்கிறார்.