ஒருத்தரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிய நடிகர் ஜெயம் ரவி, சமீபத்தில் தன் மாமியார் தயாரிப்பில் சைரன் படத்தில் நடித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். தற்போது பிரதஸ் என்ற படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, மனைவியை விவாகரத்து பெறவுள்ளதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வருகிறது.
சமீபத்தில் சினிமா விமர்சகர் அந்தணன் அளித்த பேட்டியில், ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் பிரச்சனை வர காரணம் 25 கோடி சம்பளம் கேட்டது தான் என்று கூறுவதெல்லாம் இரண்டாம் பட்சம். அங்கிருந்து அவர் வெளியே வருவதற்கு 25 கோடி கேட்டிருக்கிறார் ரவி. இதனால் ரவி மீது அவரது மனைவி ஆர்த்திக்கு எப்போதும் சந்தேகம் வரும்.
இதனால் அடிக்கடி கால் செய்து பேசுவது. போன் எடுக்கவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் இயக்குனர், கேமராமேன், உதவி இயக்குனர்கள் ஒருவரையும் விட்டுவைப்பதில்லையாம். எல்லோருக்கும் கால் செய்து ரவி எங்கே என்று விசாரிப்பாராம். யாரும் எடுக்கவில்லை என்றால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்றுவிடுவாராம்.
இப்படித்தான் ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங் என்றாலும் திடீரென அங்கு வந்து நிற்பாராம். கணவரை வேவு பார்ப்பது போல் இருந்ததை ஜெயம் ரவியால் ஒருக்கட்டத்தில் பொறுத்துக்கொள்ளவில்லை. அதில் ஆரம்பித்ததால் தான் தற்போது விவாகரத்தில் வந்திருக்கிறது என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.