விஜய்யே பனையூர் பண்ணையார் தான்..இதெல்லாம் அரசியலுக்கு செட்டாகாது.. பிரபலம்..
விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் தனது கடைசி படம் ஜனநாயகன் படத்தோடு சினிமாவைவிட்டு விலகவுள்ளார். சமீபத்தில் அக்கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்று 20 நிமிடம் வரை விஜய் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவையும் பாஜகவையும் நேரடியாகவே தாக்கி பேசியிருந்தார். இதற்கு பலரும் ஆதரவளித்த நிலையில் சில கட்சி தலைவர்கள் தொண்டர்கள் விஜய்யை விமர்சித்தனர்.
அந்தணன்
இந்நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியில் விஜய் பேச்சு குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், விஜய்யி பேச்சு சுவாரஸ்வயமாகத்தான் இருந்தது. ஆனால் திமுக, பாஜக கட்சிகளை நேரடியாக சொல்லவில்லை.
அரசியலுக்கு இது செட்டாகாது. விமர்சனம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால் ஓபனாக கட்சியின் பெயரை கூறித்தான் விமர்சனம் செய்யவேண்டும். இவர் மேலோட்டமாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்கிறார்.
பனையூர் பங்களாவின் பண்ணையார்
முக்கியமாக பண்ணையார் என்று சொல்லியிருக்கிறார். இவரையே பலரும் பனையூர் பங்களாவின் பண்ணையார் தான் என்று கூறுகிறார்கள். எனவே விஜய் அதை தவிர்த்திருக்க வேண்டும் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.