நடிகர் சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகளா இது? ஆளே இப்படி மாறிட்டாரே!

Suriya Jyothika Viral Photos
By Bhavya Nov 03, 2025 12:30 PM GMT
Report

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாஸ் காட்டிய திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தவர் நடிகை ஷ்ரியா சர்மா.

நடிகர் சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகளா இது? ஆளே இப்படி மாறிட்டாரே! | Childhood Actress Latest Photo Goes Viral

இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 2015ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த காயகுடு (Gayakudu) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் பில்லு கேமர் (Billu Gamer), நிர்மலா கான்வென்ட் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்திருந்தாலும் கதாநாயகியாக இவருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நடிப்பை தாண்டி இவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மாறிட்டாரே! 

இந்நிலையில், நடிகை ஷ்ரியா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த நடிகையா இது, என கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ போட்டோ,  

GalleryGallery