அதை கவனிக்காமல் அவருடன் சுற்றுலா.. நயன்தாராவுக்கு கெட்ட நேரம்!! பிரபல ஓபன் டாக்..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 17, 2024 05:23 AM GMT
Report

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார் நயந்தாரா. இவர் அதிகம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், விக்னேஷ் சிவனுக்கு இங்கே பெரிய வேலை இருக்கிறது.LIC படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு மனைவியுடன் வெளிநாடு சென்றுவிட்டார். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய போவதாக சொன்னார்கள்.

அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால் அவர் படத்தின் முதல் பாதியை சொல்லிவிட்டு இரண்டாம் பாதி சொல்லவில்லை. அது அனைவரையும் கோபப்படுத்தியது. தயாரிப்பு நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக திருமேனியை இயக்க சொன்னார்கள்.

இப்போது LIC படத்திலும் அதை பிரச்சனை தான். படத்தை ரிலீசுக்கு தயார் செய்யாமல் எப்படி வெளிநாடு செல்வது என்று கேட்பார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் எதையும் பார்க்காமல் சென்று விட்டார். இவ்வாறு இருந்தால் திரைப்படம் எதிர்பார்த்த படி இருக்காது. நயன்தாராவுக்கும் கேரியரில் கெட்ட நேரம் என்று அந்தணன் கூறியுள்ளார். 

அதை கவனிக்காமல் அவருடன் சுற்றுலா.. நயன்தாராவுக்கு கெட்ட நேரம்!! பிரபல ஓபன் டாக்.. | Anthanan Talk About Vignesh Sivan And Nayanthara