உடலை வைத்து கேலி செய்த பத்திரிக்கையாளர்!! காரணத்தோடு தக்க பதிலடி கொடுத்த நடிகர் அஜித்

Ajith Kumar Gossip Today Tamil Actors VidaaMuyarchi
By Edward Jul 28, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் துணிவு லுக்கிற்கு பின் உடல் எடையை ஏற்றி விமான நிலையத்திற்கு வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அஜித்தின் உருவத்தை பார்த்து பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன் விமர்சித்திருந்தார்.

உடலை வைத்து கேலி செய்த பத்திரிக்கையாளர்!! காரணத்தோடு தக்க பதிலடி கொடுத்த நடிகர் அஜித் | Anthanan Trolls Ajith Body Shaming Fans Shout

அஜித்திற்கு நெருக்கமான ஒருவர், ‘சார் இப்ப தினமும் வொர்க்கவுட் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு தெரியுமா?’ன்னாரு. ஏர்போர்ட்ல அஜித் வர்ற காட்சிய பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பாரு போல யோவ்...ஸோர்ஸ், என்னய்யா இப்படி பண்ணிட்டே? என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட அஜித் மற்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கடுமையாக அந்தணனை திட்டித்தீர்த்து வருகிறார்கள். அதில் ஒருவரும் அஜித் தான் மேற்கொண்ட சிகிச்சை பற்றி கூறி வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.