பல பேர் தவறாக அணுகினார்கள்.. அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள்.. சிவகார்த்திகேயன் பட நடிகை வேதனை..

Anu Emmanuel Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 08, 2024 01:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அனு இமானுவேல், கடந்த 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது அனு இமானுவேல் அதிகம் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

பல பேர் தவறாக அணுகினார்கள்.. அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்கள்.. சிவகார்த்திகேயன் பட நடிகை வேதனை.. | Anu Emmanuel Speak About Adjustment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அனு இமானுவேல், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர்பேசுகையில், நான் சினிமாவிற்கு வந்த புதிதில் பல பேர் என்னிடம் தவறாக அணுகினார்கள்.

சிலர் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர். ஆனால் நான் இதை கண்டு அஞ்சாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்தேன். இந்த மாதிரியான சமயத்தில் நாம் தனியாக சமாளிப்பதை விட குடும்பத்தின் துணையுடன் சமாளிப்பது நல்லது என்று அணு இமானுவேல் தெரிவித்துள்ளார்.