இணையத்தை கலக்கும் இந்த பாப்புலர் நடிகையின் குழந்தை பருவ போட்டோ.. யார் தெரிகிறதா?
Anupama Parameswaran
Viral Photos
Actress
By Bhavya
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் தெரிகிறதா?
அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி, பின் சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார்.
ஆனால், சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, இவரின் போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.