ஆணவத்தில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை அனுபமா.. இப்பவே இப்படி ஆடக்கூடாது..

Nayanthara Anupama Parameswaran
By Edward Aug 03, 2022 12:47 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா பெரும்பாலும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். பல கோடி சம்பளம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர்களை கெஞ்சவிட்டு இப்படி நடக்கிறாரே என்று நயன்தாரா படத்தின் தயாரிப்பாளர்கள் புலம்பி வருவார்கள்.

கோபத்தில் அனுபமா

ஆனால் நயன் தாரா தன் பிரடொக்ஷன் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கோலாகலமாக கலந்து கொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. அப்படியொரு சர்ச்சையில் சிக்கி இருப்பவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

பிரேமம் படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து பிரபலமான அனுபமா தமிழிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்திருக்கிறார்.

முதலில் ஜூலை 22 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் பின் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகும் என்று மாற்றியுள்ளனர். இதனால் படக்குழுவினர் நடத்தும் பிரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுகிறார்.

ஆணவத்தில் நயன்தாராவை மிஞ்சிய நடிகை அனுபமா.. இப்பவே இப்படி ஆடக்கூடாது.. | Anupama Copy Nayanthara Doing Not Attend Promotion

விளக்கம்

இதுகுறித்து அவரது சமுகவலைத்தள பக்கத்தில் விளக்கத்தை அளித்திருக்கிறார். மற்ற இரு படங்களில் பிஸியாக தொடர் ஷூட்டிங்கில் நடித்து வருகிறேன். தேதி பிரச்சனை ஏற்படும் என்பதற்காக பல முறை தேதியை மாற்றியதால் தான் என்னால் வரமுடியவில்லை.

என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று படக்குழுவினர கேட்டுக்கொண்டுள்ளார் நடிகை அனுபமா. நயன் தாரா, அஜித் உள்ளிட்ட பலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.