நான் அந்த ரோலில் நடித்தது தவறு.. நடிகை அனுபமா வருத்தம்
அனுபமா பரமேஸ்வரன்
மலையாளம், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி, பின் சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாகவும் அனுபமா நடித்து இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானார்.
வருத்தம்
இந்நிலையில், தில்லு ஸ்கொயர்' படத்தில் லில்லி வேடத்தில் நடித்தது குறித்து நடிகை அனுபமா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " தில்லு ஸ்கொயர் படத்தில் லில்லி வேடத்தில் நடித்தது என் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் பிடிக்கவில்லை.
அந்த படத்தில் நடிக்கும்போது ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்தேன். நான் எதிர்பார்த்தபடி விமர்சனங்களைப் பெற்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.