இயக்குனர்களை கண்டாலே தெரித்து ஓடும் அனுஷ்கா ஷெட்டி
Anushka Shetty
By Yathrika
ஒரு படத்திற்காக உடல் எடை ஏற்றி, குறைத்து எல்லாம் பலர் சாதாரணமாக செய்துவிட்டார்கள். ஆனால் அதெல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு தான் செய்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால் இங்கே ஒரு நடிகைக்கு அதுவே பிரச்சனையாக அமைந்துவிட்டது.
இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஏற்றி நடித்தார் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அதற்காக பலரும் பாராட்டினார்கள். ஆனால் அதுதான் இப்போது அவருக்கு பிரச்சனையாக அமைந்திருக்கிறது.
அதாவது அவரால் எளிதில் உடல் எடையை குறைக்கவே முடியவில்லையாம். தைராய்டு இருப்பதால் அவ்வளவு எளிதில் குறைக்க முடியவில்லையாம்.
எனவே கால்ஷீட் ஏற்கெனவே கொடுத்த படத்தை எல்லாம் கேன்சல் செய்து வருகிறாராம்.
ஒரு கட்டத்தில் இயக்குனர்கள் வந்தாலே உடல் எடை பிரச்சனையால் அவர் தெரித்து ஓடுவதாக கூறப்படுகிறது.