39 வயதான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வீடு கார் இத்தனையா!

salary baahubali anushkashetty
By Edward Jun 13, 2021 05:35 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. தெலுங்கு நடிகையாக சூப்பர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தம்ழில் ரெண்டு என்ற பட்ஜெட் குறைவான படத்தின் மூலம் ஆரம்பித்த அனுஷ்கா செட்டி நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து, தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகையாகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். சில வருடங்களுக்கு முன் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டியதால் தற்போது வரை பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக இரு பாகங்களிலும் சேர்ந்து 7 கோடி வரை சம்பளமாக பெற்றார் என்று கூறப்பட்டது.

கடைசியாக சைலன்ஸ் (நிசப்தம்) படத்தில் நடித்திருந்த அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் என்று கிசுகிசு எழுந்தது. தற்போது அனுஷ்கா செட்டியின் சொத்து மதிப்பு பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் படி நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 110 கோடி. ஒரு படத்திற்கு 3ல் இருந்து 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஒரு வருட வருமானமாக 11 கோடியாக கணக்கில் காட்டி வருகிறார் அனுஷ்கா.

பெங்களூர், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் லக்‌ஷரி டிசைன் வீடுகள் வைத்துள்ளார். ரியல் எஸ்டேட்டில் அவருக்கு சொந்தமான சில சொத்துக்களும் உள்ளதாம். மேலும், பிஎம் டபிள்யூ, ஆடி கார் உள்ளிட்ட சில கார்களை வைத்துள்ளார் அனுஷ்கா செட்டி.