ரசிகர்களுக்கு வருத்ததை கொடுத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி.. என்ன இப்படி பண்ணிட்டாரு
அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. சிங்கம், வேட்டைகாரன், லிங்கா, என்னை அறிந்தால் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்ற அனுஷ்கா கடைசியாக பாகுபலி 2 எனும் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.
இதன்பின் உடல் எடை கூடி சினிமாவில் பெரிதும் தலைகாட்டாமல் இருந்து வந்த அனுஷ்காவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காட்டி. இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து Kathanar: The Wild Sorcerer எனும் மலையாள திரைப்படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு வருத்ததை கொடுத்த நடிகை
இந்த நிலையில், ரசிகர்களுக்கு வருத்தத்தை தரும் வகையில் விஷயம் ஒன்றை நடிகை அனுஷ்கா செய்துள்ளார். நடிகை அனுஷ்கா ஷெட்டி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் 7.1 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அனுஷ்கா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது, அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்ததை தந்துள்ளது.