திருமணத்திற்கு கண்டீசன் போட்ட பிரபல நடிகை!! அதுவும் இப்படியான மாப்பிள்ளை தான் வேணுமாம்..
அனுஸ்ரீ நாயர்
கேரள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அனுஸ்ரீ நாயர். நடிகர் பஹத் பாசில் நடித்த டயமண்ட் நெக்லஸ் படத்தில் அனுஸ்ரீ அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மோகன்லால், மம்முட்டி என முன்னணி மலையாள நடிகர்களுடன் நடித்த அனுஸ்ரீ, 2012ல் இருந்து தற்போது வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 34 வயதாகும் அனுஸ்ரீயின் திருமணம் குறித்த பேச்சுக்கள் வதந்திகளாக பரவி வருகிறது.
திருமணத்திற்கு கண்டீசன்
அந்தவகையில், இளம் நடிகர் ஒருவரை அனுஸ்ரீ திருமணம் செய்யவுள்ளதாகவும், அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனை மறுத்துள்ள அனுஸ்ரீ, அவை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.
தான் இதுவரை திருமணத்தை பற்றி சிந்திக்கவில்லை என்று கூறினாலும் தற்போது அது குறித்து முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ள அனுஸ்ரீ, திருமணம் செய்யும்போது சில விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி எந்த கட்டுப்பாடும் இல்லாமல் என்னை சினிமாவில் நடிக்க அனுமதிக்கும் அளிக்கும் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவர்களுக்கு ஒரு கண்டிஷன் இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். அதாவது, தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் வீட்டோடு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்பது தான் அனுஸ்ரீயின் கண்டீஷனாம்.
காரணம்
அதற்கு காரணம், நான் 34 வருடங்களாக பத்தனம்திட்டாவில் வசித்து வரும் வீட்டைவிட்டு வேறு இடத்திற்கு மாற தனக்கு விருப்பம் இல்லை, வசதியும் இல்லை. அதனால் வீட்டோடு மருமகனாக வர நினைப்பர்களை திருமணம் செய்யவிரும்புகிறேன், அதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்யவும் இருக்கிறார் என்று அனுஸ்ரீ தெரிவித்துள்ளாராம்.