போதும் இதோட நிறுத்திக்க..நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கெஞ்சிய தந்தை!!
அபர்ணா பாலமுரளி
மலையாள சினிமாவில் பஹத் பாசி நடிப்பில் மகேஷிண்டே பிரதியாம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமிகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இதனை தொடர்ந்து தமிழில் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது ருத்ரம் என்ற படத்தில் இயக்குநர் ஜிஷோ லான் அண்டனி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் ஆக்ஷன் ரோலில் நடித்து சவாலான காட்சிகளில் முன்பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்துள்ளார். அப்படி முன்பயிற்சி செய்ததை வீட்டில் ரிகர்சல் செய்து பார்க்க அவரது தந்தை தான் அபர்ணா பாலமுரளி பயன்படுத்தி இருக்கிறாராம்.
போதும், கெஞ்சிய தந்தை
சமீபத்தில் அபர்ணா அளித்த பேட்டியொன்றில், பயிற்சி எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தன் தந்தையை அழைத்து பயிற்சி எடுத்த ஆக்ஷன் காட்சிகளை அவரிடம் செய்து காட்டுவேன்.
தந்தையும் வேறுவழியின்றி கொஞ்சம் பயத்துடன் ஆக்ஷன் காட்சிகளை எதிர்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமாளித்தார். நல்ல வேளையாக எனக்கு ரிகர்சல் செய்ய இப்படியொரு தந்தை கிடைத்தது வசதியாக போய்விட்டது.
அதுமட்டுமில்லாமல் என்னிடம் என் தந்தை, மகளே இந்த ஒரு ஆக்ஷன் படம் மட்டும் போதும், இனிமேல் வேறு எந்த படத்திலும் தயவு செய்து ஒத்துக்கொள்ளாதே என்று தந்தை கூறியதாக அடக்க முடியாத சிரிப்போடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.