உடல் பற்றி பொது இடத்தில் கேட்ட நபர்!! மிகவும் அவமானமாக உணர்ந்த அபர்ணா..

Aparna Balamurali Tamil Actress Actress
By Edward Sep 15, 2025 02:30 AM GMT
Report

அபர்ணா பாலமுரளி

மலையாள சினிமாவில் பஹத் பாசி நடிப்பில் மகேஷிண்டே பிரதியாம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமிகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

உடல் பற்றி பொது இடத்தில் கேட்ட நபர்!! மிகவும் அவமானமாக உணர்ந்த அபர்ணா.. | Aparna Balamurali Recalls A Body Shaming Incident

இதனை தொடர்ந்து தமிழில் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மனவேதனை

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பொது இடத்தில், அறிமுகமில்லாத ஒருவர் என்னிடம் வந்து என்ன அபர்ணா, மிகவும் குண்டாகிவிட்டீர்கள், நன்றாக சாப்பிடுவீங்க போல என்று கூறினார்.

அந்த நபர் அப்படி சொன்னதும் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். அப்போது அந்த நபரிடம், என் எடை கூடிவிட்டது என்று நீங்கள் எப்படி சொல்லலாம். இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசக்கூடாது என்றேன்.

உடல் பற்றி பொது இடத்தில் கேட்ட நபர்!! மிகவும் அவமானமாக உணர்ந்த அபர்ணா.. | Aparna Balamurali Recalls A Body Shaming Incident

பொது இடங்களில் யாருடைய உடல் தோற்றம் பற்றி இத்தகைய கருத்துக்களை சொல்வது தவறானது என்று கூறினேன். இந்த சம்பவம் நடந்து பல மாதங்களாகிவிட்டது. ஆனால் அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

உரிமையோடு பேசுகிறேன் என்று பலரும் இப்படித்தான், தேவையில்லாத விஷயத்தை பேசி வருகிறார்கள் என்று அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.