மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.. திருமண தேதி எப்போது தெரியுமா?

Indian Actress Aparna Das Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 03, 2024 08:03 AM GMT
Report

மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து டாடா படத்தில் கவினுக்கு கோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.. திருமண தேதி எப்போது தெரியுமா? | Aparna Das Getting Married Manjummel Boys Actor

சமீபத்தில் சர்வைவல் த்ரில்லராக உருவாக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த தீபக் பரம்போலை, அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த சூழலில் அபர்ணா தாஸ் - தீபக் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த மாதமே இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.  

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.. திருமண தேதி எப்போது தெரியுமா? | Aparna Das Getting Married Manjummel Boys Actor