ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் அப்படிப்பட்ட குழந்தையா பிறந்துவிடும்!! வாய்விட்டு மொக்கை வாங்கிய அப்துல் ரசாக்..

Aishwarya Rai Cricket Gossip Today Pakistan national cricket team
By Edward Nov 15, 2023 09:30 AM GMT
Report

சினிமா பிரபலங்களை தாண்டி கிரிக்கெட் வீரர்களும் சில சர்ச்சையான பேச்சுக்களால் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அப்படி பாகிஸ்தான் அணியின் தோல்வியடைந்ததை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் விமர்சித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் அப்படிப்பட்ட குழந்தையா பிறந்துவிடும்!! வாய்விட்டு மொக்கை வாங்கிய அப்துல் ரசாக்.. | Apologise Abdul Razzaqcontroversial Aishwarya Rai

நாங்கள் கிரிக்கெட் விளையாடியபோது எங்கள் கேப்டன் யுனிஸ்கானின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். என்னை மேம்படுத்தி சொல்ல அவர்கள் நம்பிக்கையும், வலிமையையும் கொடுத்தார்கள்.

ஆனால் தற்போதைய பாகிஸ்தான் வீரர்களை மேம்படுத்த எந்த எண்ணமும் நம் நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்வது மூலம் மட்டும் உங்களுக்கு நல்ல திறமையான குழந்தி பிறந்திவிடும் என்று நம்பினால் அது ஒருபோதும் நடக்காது என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.

இதற்கு பலர் கண்டனத்தையும் எதிர்ப்பை தெரிவித்து விமர்சித்தனர். தற்போது இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார் அப்துல் ரசாக்.

அவர் வெளியிட்ட வீடியோவில், வாய்த்தவறியும், தவறுதலாக ஐஸ்வர்யா ராயின் பெயரை பயன்படுத்திவிட்டதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யார் மனதை புண்படுத்த நான் விரும்பவில்லை என்றும் கூறி விளக்கமளித்திருக்கிறார்.