தர்பார் தோல்வியால் அகலபாதாளத்திற்கு சென்ற ஏ.ஆர். முருகதாஸ்.. இப்போது அவருடைய நிலை இதுதான்..

vikram sun pictures ar murugadas
By Kathick Mar 31, 2022 06:30 PM GMT
Report

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார். இப்படத்தின் தோல்வியின் காரணமாக அடுத்தடுத்து படங்களை அவரால் இயக்கமுடியாமல் போனது. இதனால் கொஞ்சம் காலம் பின்தங்கி இருந்தார் முருகதாஸ்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் வேற லெவல் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் முருகதாஸ். ஆம், தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் கமிட்டாகியுள்ளார். விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவுள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குனர் முருகதாஸ், மீண்டும் இப்படத்தின் மூலம் மாஸ் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.